உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரியில் ரத்த தான முகாம்

கல்லுாரியில் ரத்த தான முகாம்

உடுமலை:உடுமலை, வித்யாசாகர் கலை கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது. நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், உடுமலை அரசு மருத்துவமனை, தேஜஸ் ரோட்டரி சார்பில் நடந்த முகாமை, கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.முகாமில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, ரத்ததானம் செய்தனர். அரசு டாக்டர்கள், தேஜஸ் ரோட்டரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ