| ADDED : நவ 16, 2025 12:40 AM
பல்லடம்: பல்லடம் அருகே, குடியிருப்பினர் ஏற்பாட்டில் குழந்தைகள் தின விழா குதுாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, பல்லடம் அருகே, கே.என்.புரம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். முன்னதாக, கே.என்.புரம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பினர், அங்குள்ள தனியார் மண்டபத்தில் குழந்தைகள் தின விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு, குழந்தை களுக்கான ஆடல், பாடல், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைக் செட் வாயிலாக, பாடல்கள் ஒளிபரப்பப்பட, குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஒரு வயது குழந்தை உட்பட, சிறுவர் சிறுமியர் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.