உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தொடர் மழை; சில்லுன்னு சீதோஷ்ணம்

 தொடர் மழை; சில்லுன்னு சீதோஷ்ணம்

உடுமலை: தொடர் மழையால், நகரில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியது; குளிர்ந்த சீதோஷ்ணத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், பகல் முழுவதும் சாரல் மழை தொடர்ந்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது; இரவில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பெதப்பம்பட்டியில், 72 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது. அமராவதி அணை 23; திருமூர்த்தி அணையில், 22; நல்லாறு பகுதியில், 14 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது. நகரில் பெய்த மழையால், உழவர் சந்தை ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மழை நீர் வெளியேறாமல் தேங்கி, மக்கள் சிரமப்பட்டனர். இரு நாட்களாக பெய்த மழை, குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை