உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தொடர் மழை நகரில் பாதிப்பு

 தொடர் மழை நகரில் பாதிப்பு

உடுமலை: தொடர் மழையால் உடுமலை நகரின் பிரதான ரோடுகளில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மக்கள் பாதித்தனர். நிரந்தர தீர்வாக வடிகால்களை துார்வார வேண்டும். உடுமலை சுற்றுப்பகுதிகளில், நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. நகரில், மதியம் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக மழை நீடித்தது. பஸ் ஸ்டாண்ட் முதல் தளி ரோடு சிக்னல் வரை, மழை நீருடன் கழிவு நீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது; தாராபுரம் ரோட்டிலும் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. ஒவ்வொரு மழைக்கும் பிரதான ரோடுகளில், கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடி மக்கள் பாதிப்பது தொடர்கதையாக உள்ளது. நிரந்தர தீர்வாக வடிகால்களை முறையாக துார்வார வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி