உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அம்மனுக்கு லட்சார்ச்சனை: திரளான பக்தர்கள் வழிபாடு

அம்மனுக்கு லட்சார்ச்சனை: திரளான பக்தர்கள் வழிபாடு

உடுமலை:உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், தை மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விசாலாட்சி அம்மனுக்கு, லட்சார்ச்சனை நேற்று காலை 6:00 மணிக்கு, மங்கள இசை, விநாயகர் பூஜையுடன் துவங்கியது.அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் செய்து, லட்சார்ச்சனை துவங்கியது. மாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால லட்சார்ச்சனை நடந்தது.இரவு, 8:15 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்திக்கு பிறகு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை