| ADDED : செப் 25, 2011 10:27 PM
உடுமலை : சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) திருமகள்ஜோதி அறிக்கை: உடுமலை வட்டாரத்தில் வரும் சம்பா பருவ சாகுபடிக்காக அரசு சான்று பெற்ற ஏடிடி.45., ரக நெல் விதைகள் (ஆதார நிலை மற்றும் சான்று நிலை) வினியோகத்திற்காக வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலும், குறிச்சிக்கோட்டை துணை வட்டார கிடங்கிலும் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வம்பன் 3, டிஎம்வி 1, ஏடிடி 45 ரக சான்று நிலை உளுந்து மற்றும் டிஎம்வி 7 ரக சான்று நிலை நிலக்கடலை விதைகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். வாளவாடியில் வேளாண்துறையில் சிறு, குறு விவசாயிகளாக பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இன்று (26ம் தேதி) தங்களுடைய சாகுபடி நிலத்தின் மண் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அளிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.