உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்

தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்

உடுமலை;தி.மு.க., வைச்சேர்ந்த குடிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.குடிமங்கலம் ஒன்றிய குழு 7வது வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) கல்யாணி. தி.மு.க., வைச்சேர்ந்த இவர் நேற்று, உடுமலை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் முன்னிலையில், அ.தி.மு.க., வில் இணைந்தார்.புதுப்பாளையம், அடிவள்ளி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய, 7வது வார்டில் இருந்து கல்யாணி தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.மேலும், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த சாமிநாதன், புக்குளம் தங்கராஜ் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.அ.தி.மு.க., குடிமங்கலம் மேற்கு ஒன்றியச்செயலாளர் அன்பர்ராஜன், ஒன்றிய கவுன்சிலர் முருகன் மற்றும் புதுப்பாளையம், அடிவள்ளி அ.தி.மு.க., கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்