மேலும் செய்திகள்
'டூ வீலர்'கள் நிறுத்தம்; கோவில் முன் நெரிசல்
05-Apr-2025
திருப்பூர் தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நாட்ராயன், 47; தனது வீட்டின் முன், 'டூவீலரை' நிறுத்தி வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது வாகனத்தை காணவில்லை.இருவர் தனது டூ வீலரை தள்ளி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்த பூபாலன், 29, பழநி கலையமுத்துாரை சேர்ந்த நாகராஜ், 29 என்பதும், தாராபுரத்தில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.மது போதையில், 'டூ வீலர்'களை திருடிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
05-Apr-2025