திருப்பூர்;திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, ஜன., 13 முதல் நடத்தப்பட்டு வருகிறது.தினமும் காலை, மாலை என இருவேளையும், 30 ஓவர் போட்டிகள் நடக்கிறது. திறமை காட்டி வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது.நேற்று முருகம்பாளையம் வயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்ற கடப்பா ஒய்.எஸ்.ஆர்., கிரிக்கெட் அசோசியேஷன் அணி, 30 ஓவரில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 253 ரன் எடுத்தது. அணியின் பேட்ஸ்மேன், பாரத் ரெட்டி சதம், (101) கடந்து அசத்தினார். கிருத்திக் ரெட்டி, 87 ரன் எடுத்தார்.கடின இலக்கை விரட்டிய, கிரிக்கெட் நெக்ஸ்ட் அகாடமி அணி, 30 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 196 ரன் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல், ஹர்ஷவர்தன், 40 ரன் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய, ஒய்.எஸ்.ஆர்., அணி பவுலர் கிருத்திக் ரெட்டி, ஆறு ஓவரில், 25 ரன் கொடுத்து, நான்கு விக்கெட் கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 57 ரன் வித்தியாசத்தில் கடப்பா ஒய்.எஸ்.ஆர்., கிரிக்கெட் அசோசியேஷன் அணி வெற்றி பெற்றது. சதமடித்து அசத்திய, பாரத் ரெட்டி ஆட்டநாயகனாக தேர்வாகினார். மற்றொரு போட்டி
மதியம் நடந்த இரண்டாவது போட்டியில், ைஹதாரபாத் கோச்சிங் பியாண்ட் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. 25.4 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 138 ரன் எடுத்தது. சுப்ரமணியம், 30 ரன் எடுத்தார்.எளிய இலக்கை விரட்டிய, அனந்தப்பூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, 30 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 135 ரன் எடுத்தது. மூன்று ரன் வித்தியாசத்தில், ைஹதாரபாத் கோச்சிங் பியாண்ட் அணி 'த்ரில்' வெற்றி பெற்றது.இந்த அணியின் பவுலர் நமன்சவுத்ரி மூன்று ஓவரில், ஏழு ரன் மட்டும் கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தலாக பந்துவீசினார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.