உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தென்னையை காக்க பசுந்தாள்: உரம் விவசாயிகள் ஆர்வம்

 தென்னையை காக்க பசுந்தாள்: உரம் விவசாயிகள் ஆர்வம்

உடுமலை: வாடல் நோயை கட்டுப்படுத்தவும், உரப்பயன்பாட்டை குறைக்கவும், தென்னை மரங்களின் வட்டப்பாத்திகளில், சணப்பை உள்ளிட்ட பசுந்தாள் உரங்களை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. பருவமழை காலங்களில், தென்னை மரங்களுக்கு பல்வேறு ரசாயன உரங்களை இடுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் உள்ளிட்ட தொடர் நோய்த்தாக்குதலால், இச்சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உரச் செலவை குறைக்கவும், மண் வளத்தை மேம்படுத்தி, வாடல் நோயை கட்டுப்படுத்தவும், பசுந்தாள் உரங்களை பயன்படுத்த இரு வட்டார விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில், சணப்பை, தக்கை, கொளுஞ்சி, நரிப்பயறு உள்ளிட்ட விதைகளை தோப்பு முழுவதும் விதைப்பு செய்கின்றனர். வட்டப்பாத்திகளிலும் இவ்விதைகளை துாவி வளர்க்கின்றனர். செடிகள் பூக்கும் தருணத்தில், மடக்கி உழவு செய்து உரமாக மாற்றுகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: நெல் வயல்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த பசுந்தாள் உரப்பயன்பாடு, தென்னை சாகுபடியிலும் கூடுதலாகி வருகிறது. மண் வளம் பாதிப்பால், தென்னை மரங்களில், காய்ப்புத்திறன் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. அவற்றை தவிர்க்க, பசுந்தாள் உரங்களை பயன்படுத்த துவங்கியுள்ளோம். வட்டார வேளாண், தோட்டக்கலை அலுவலகங்களில் பருவமழை காலத்தில், சணப்பை உள்ளிட்ட விதைகளை மானிய விலையில் விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி