உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியின் ஐந்தாண்டு பணி மனித வள மேலாண் அதிகாரி ஆய்வு

மாநகராட்சியின் ஐந்தாண்டு பணி மனித வள மேலாண் அதிகாரி ஆய்வு

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியில் கடந்த, 2019ம் ஆண்டு முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிர்வாக ரீதியாக பிரிவு வாரியான பணிகள் நிலை குறித்து ஆய்வு நடந்தது. தமிழக அரசின் மனித வள மேலாண்மை (ஆய்வு) துறை இறுதி ஆய்வு அலுவலர் ஆபிரகாம், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டார். கமிஷனர் பவன்குமார் பிரிவு வாரியாக பணிகள் மற்றும் யெல்பாடுகள் குறித்து விளக்கினார்.பொது நிர்வாகம், பொறியியல் பிரிவு, வருவாய் பிரிவு, சுகாதாரம், நகரமைப்பு பிரிவு, தொழில்நுட்ப பிரிவு உட்பட, 17 பிரிவுகளின் பணிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஆய்வு கடந்த 2019ம் ஆண்டுக்குப் பின் தற்போது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.ஆய்வின் ஒரு கட்டமாக மாநகராட்சியில் செயல்படும் கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் ஆய்வு செய்யப்பட்டது. மையத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள், பணிகள் குறித்தும் ஆபிரகாம் முழுமையாக கேட்டறிந்தார். மையத்தின் மூலம் பெறப்படும் புகார்கள் பதிவு செய்தல், நடவடிக்கை மற்றும் தீர்வு காணும் முறைகள் குறித்து கேட்டறிந்து உரிய ஆவணங்களை அவர் ஆய்வு செய்தார்.---------------------------------------------------------------------திருப்பூர் மாநகராட்சி கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தில், மனித வள மேலாண்மை (ஆய்வு) துறை இறுதி ஆய்வு அலுவலர் ஆபிரகாம், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை