| ADDED : மார் 18, 2024 12:50 AM
பல்லடம்;ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்நாட்களில், இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோட்பாட்டை இஸ்லாமியர்கள் பின்பற்றி வருகின்றனர். இதன்படி, பல்லடம் பாரதி அறக்கட்டளை சார்பில், 11வது ஆண்டாக, 55 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.அறக்கட்டளை நிர்வாகி சாகுல் அமீது கூறுகையில், ''அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ரமலான் பண்டிகை நாட்களில், வறுமையில் உள்ள பல குடும்பங்களுக்கு உதவி வருகிறோம். இதற்காக, பாரதி அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல்வேறு நல்லுள்ளம் படைத்தவர்களும் இதில் இணைந்து பல்வேறு குடும்பங்களுக்கு உதவி வருகின்றனர். ரமலான் பண்டிகையை முன்னிட்டு, 11வது ஆண்டாக, 55 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. வர இயலாத சூழலில் உள்ள குடும்பத்தினருக்கு அவர்கள் வீடு தேடிச் சென்றும் வழங்கி வருகிறோம்'' என்றார்.