உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொடுத்தா ராம்... ஏ.டி.எம்.,மில் கண்டெடுத்த பணம்

கொடுத்தா ராம்... ஏ.டி.எம்.,மில் கண்டெடுத்த பணம்

திருப்பூர்;தாராபுரத்தில் ஏ.டி.எம்., மையத்தில் கண்டெடுத்த, 20 ஆயிரம் ரூபாயை, போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை சேர்ந்தவர் தனபால், 45, நடத்துனர். இவர் நேற்று மதியம் தாராபுரம், பொள்ளாச்சி ரோடு ரவுண்டானா அருகே உள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது, மெஷின் மேலே கேட்பாரற்று கிடந்த, 20 ஆயிரம் ரூபாயை எடுத்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.தாராபுரம் போலீசார், சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் கொடுத்து, 'சிசிடிவி' கேமராவை பார்வையிட்டனர். அதில், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் முத்துசாமி, 66 என்பவர் பணத்தை தவற விட்டு சென்றது தெரிந்தது. அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவரிடம் பணத்தை போலீசார் ஒப்படைத்தனர். பணத்தை கண்டெடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த தனபாலின் நேர்மையை போலீசார் மற்றும் பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி