உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளியை தாக்கியவர் மீது குண்டாஸ்

தொழிலாளியை தாக்கியவர் மீது குண்டாஸ்

காங்கேயம்: காங்கேயத்தில் கூலி தொழிலாளியை தாக்கிய கைதி மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.காங்கேயம், -திருப்பூர் சாலை, திருச்செந்தில் நகரை சேர்ந்தவர் பிரசாந்த், 25; நாகப்பட்டினம், கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, 31; கடந்த மார்ச் மாதம், 6ம் தேதி இரவு, கத்தி முனையில் பிரசாந்த்தை மிரட்டி, பணம் மற்றும் மொபைல்போன் கேட்ட வழக்கில், காங்கேயம் போலீசார் கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவு நகல், நேற்று அவரிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை