உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எத்தனை வேட்பாளர் கூடும் எதிர்பார்ப்பு 

எத்தனை வேட்பாளர் கூடும் எதிர்பார்ப்பு 

திருப்பூர் தொகுதி மறு சீரமைப்புக்கு பின், கடந்த, 2009 நடந்த முதல் லோக்சபா தேர்தலில் சுயேட்சை உட்பட, 21 வேட்பாளர்கள், 2014 மற்றும், 2021 தேர்தலில், 12 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். 2019 தேர்தலில் இ.கம்யூ., - அ.தி.மு.க., ம.நீ.ம., நாம் தமிழர், பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி (இ.கம்யூ.,) திருப்பூரில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதே நேரம், அ.தி.மு.க., உறுதி செய்யாமல் உள்ளது. ம.நீ.ம., ராஜ்சபா சீட்டுடன் ஒதுங்கிக் கொண்டதால், போட்டியில்லை என்பது தெளிவாகியுள்ளது. நாம் தமிழர் வேட்பாளரை (சீதாலட்சுமி) ஏற்கனவே அறிவித்து விட்டது. பகுஜன்சமாஜ் தனித்து போட்டி என அறிவித்துள்ளது.பா.ஜ., முடிவு என்ன என்பது இன்னமும் உறுதியாகமல் உள்ளது. கடந்த முறை சுயேட்சையாக, ஏழு பேர் போட்டியிட்டுள்ளனர். இம்முறை கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், சுயேட்சை எண்ணிக்கையும் குறையும் பட்சத்தில், ஒற்றை இலக்க நபர்களே எம்.பி., வேட்பாளர்களாக போட்டியிடும் சூழல் திருப்பூரில் உருவாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை