| ADDED : பிப் 10, 2024 12:24 AM
பல்லடம்:''மூலப்பொருட்கள் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் ஹாலோபிளாக் விலை குறையும்'' என, ஹாலோபிளாக் கல் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்ட ஹாலோபிளாக் கல் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடம், ராயர்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. செயலாளர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:கடந்த, பிப்., 1 முதல் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட அவற்றின் விலையை யூனிட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தினர். இதனால், ஹாலோபிளாக் கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.எனவே, ஹாலோபிளாக் கல் விலையை, 5 முதல் 6 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஹாலோபிளாக் கற்களுக்கான மூலப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், ஹாலோபிளாக் விலை மறு நிர்ணயம் செய்யப்படும். இருப்பினும், விற்பனையை பொறுத்து வரும் நாட்களில் விலை நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.----திருப்பூர் மாவட்ட ஹாலோபிளாக் கல் உற்பத்தியாளர் சங்க ஆலோசனைக்கூட்டம், பல்லடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கவேல், செயலாளர் உள்ளிட்ட உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
உற்பத்தி, விற்பனை நிறுத்தம் வாபஸ்
ஹாலோபிளாக் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டி, கடந்த 6ல் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.