உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தேசிய நெடுஞ்சாலைக்கு இதுவா கதி?

 தேசிய நெடுஞ்சாலைக்கு இதுவா கதி?

திருப்பூர்: தொடர் மழையால், ஒட்டன்சத்திரம் - திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை, கோவில்வழி அருகே சேதமாகியுள்ளது. சாலை சேறும், சகதியுமாக மழைநீர் தேங்கி நிற்பதால், தென்மாவட்டங்களில் இரு ந்து, திருப்பூர் வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. மதுரை, தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து திருப்பூர் வரும் வாகனங்கள் ஒட்டன்சத்திரம் - திருப்பூர் (அவிநாசி) தேசிய நெடுஞ்சாலையில் (எண்: 381) அதிகளவில் பயணிக்கின்றன. தாராபுரம் - திருப்பூர் இடையே, 46 கி.மீ., சாலை ஓராண்டுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. கோவில்வழி புறநகர் பஸ் ஸ்டாண்ட் அருகே இடதுபுற சாலை வளைவில், நெடுஞ்சாலையின் பாதி வரை மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக மழைநீர் வெளியேற வழியில்லாமல் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இரவில் விளக்குகள் இல்லாததால், வேகமெடுக்கும் முந்திச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. புதிதாக இடத்தை கடப்பவர்கள் நிலைகுலைகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மலர்விழியிடம் கேட்ட போது, 'சேறும், சகதியுமாக மாறியுள்ள இடத்தில் உடனடியாக மண் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விரைவில் சீரமைக்கப்படும்,' என, பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை