உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களின் கருணை உள்ளம்

கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களின் கருணை உள்ளம்

திருப்பூர்: தீபாவளியையொட்டி, திருப்பூர், புண்ணியவதி சாலையில் உள்ள கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ., முதுநிலைப்பள்ளி மாணவர்கள், கருணை இல்லங்களான பசியில்லா திருப்பூர், வேல்ப்ளஸ் கருணை இல்லம், அன்னை சிறப்பு பள்ளி, மகாத்மா கருணை இல்லம் ஆகியவற்றில் உள்ள குழந்தைகளுடன் இனிப்புகளைப் பரிமாறியும், பரஸ்பரம் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்தும் மகிழ்ந்தனர். கிட்ஸ் கிளப் குழுமப் பள்ளிகளின் தலைவர் மோகன் கார்த்திக், செயலாளர் நிவேதிகா ஆகியோரது வழிகாட்டுதல் படி, மாணவர்கள் தங்கள் சிறுசேமிப்பில் இருந்து உணவு, பலகாரங்கள், தானியங்கள், புத்தாடைகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களைப் பரிசளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி