உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேலோ விளையாட்டில் பங்கேற்கும் உடுமலை மாணவர்களுக்கு பாராட்டு

கேலோ விளையாட்டில் பங்கேற்கும் உடுமலை மாணவர்களுக்கு பாராட்டு

உடுமலை:கேலோ இந்தியா களரி பயட்டு போட்டியில், உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், ஜன., 19 முதல் 31 வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை உட்பட நான்கு இடங்களில் நடக்கிறது.மொத்தமாக, 36 மாநிலங்களிலிருந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.இப்போட்டிகளில் ஒன்றான, களரிப்பயட்டு போட்டி திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கில், 27 முதல் 29ம் தேதி வரை நடக்கிறது. தேசிய அளவிலான இப்போட்டியில் பங்கேற்க, தமிழக அணி சார்பில் 7 மாணவியர் மற்றும் 10 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.அதில், உடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவர் சேகுவாரா, மடத்துக்குளம் அரசு பள்ளி மாணவர்கள் பிரவீண்பிரசாந்த், தரண் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.மாணவர்கள், மாவட்டம், மாநிலம் அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று, தற்போது இப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.போட்டியாளர்களை, பள்ளி மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் ஊக்குவித்து பாராட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி