உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மார்க்கெட் செல்ல புதிய வழி மக்களுக்கு விபத்து அபாயம்

மார்க்கெட் செல்ல புதிய வழி மக்களுக்கு விபத்து அபாயம்

பல்லடம்;பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், தினசரி மார்க்கெட் அமைந்துள்ளது.மார்க்கெட்டில் இருந்த சில கடைகள் மிகவும் சேதமடைந்ததன் காரணமாக, நகராட்சி மூலம் புதிய கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கடைகளுக்காக, பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து செல்லும்படியாக புதிய வழி ஒன்று ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் கூறியதாவது:பஸ் ஸ்டாண்ட் வழியாக தினசரி மார்க்கெட்டுக்கு செல்ல ஏற்கனவே ஒரு வழி உள்ளது. தற்போது, மற்றொரு வழி உருவாக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த காலத்தில், இந்த இடத்தில் இருந்த வழியால், விபத்துகள் ஏற்பட்டு வந்ததை கருத்தில் கொண்டு, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.தற்போது மீண்டும் அதே இடத்தில் புதிதாக வழி அமைக்கும் முயற்சி நடக்கிறது. புதிய வழி ஏற்படுத்தப்பட்டு வரும் இடத்தில் பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் பஸ்கள் நின்று செல்கின்றன. இந்த இடத்தில் வழி அமைவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதுதவிர, இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்டோருக்கு விபத்து அபாயம் உள்ளதால், புதிய வழி அமைக்கும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ