| ADDED : ஜன 23, 2024 01:24 AM
திருப்பூர்;பாலக்காடு டவுன் - திருச்சி பாஸ்ட் பாசஞ்சர் ரயில் (எண்:16844) இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.கரூர் - திருச்சி வழித்தடத்தில், மகாதானபுரம் - லால்பேட்டை - குளித்தலை இடையே பொறியியல் மேம்பாட்டு பணி இன்று நடக்கிறது. இதனால், பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் ரயில் இன்று (23ம் தேதி) வரும், 26, 30ம் தேதி, கரூர் வரை மட்டும் இயங்கும். சீதலவாய், குளித்தலை, பேட்டை வாய்த்தலை, திருச்சி கோட்டை, திருச்சி ஜங்ஷன் செல்லாது.அதே நேரம், மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இயங்கும் ரயில் (எண்:16843) மதியம், 1:00 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக, மதியம், 2:00 மணிக்கு திருச்சியில் வரும், 23, 26, 30ம் தேதி புறப்படும். இதனால், திருப்பூருக்கு மாலை, 4:50 மணிக்கு பதிலாக, 5:50 மணிக்கு வரும். பாலக்காடு டவுன் ஸ்டேஷனை இரவு, 8:25 மணிக்கு பதிலாக, 9:25 மணிக்கு சென்று சேரும்.