உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மேலும் 2 மாடுகள் பலி : போலீஸ் விசாரணை

 மேலும் 2 மாடுகள் பலி : போலீஸ் விசாரணை

பல்லடம்: பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சி, வலசுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மாசை, 48. இருபதுக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், தண்ணீர் வைத்துவிட்டு வந்த சில மணி நேரங்களில், இரண்டு மாடுகள் சுருண்டு விழுந்து உயிரிழந்தன. சில மாடுகள், சோர்வடைந்த நிலையில் மயங்கின. அரசு கால்நடை மருத்துவ குழுவினர், அங்கு வந்து இதர மாடுகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக குளுக்கோஸ் ஏற்றியும், தடுப்பு மருந்துகள் வழங்கியும் சிகிச்சை மேற்கொண்டனர். உயிரிழந்த இரண்டு மாடுகளின் உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மாடுகள் அங்கேயே புதைக்கப்பட்டன. தண்ணீரின் மாதிரியும் சேகரிக்கப்பட்டது. நேற்று காலை மேலும், 2 மாடுகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. பலியான மாடுகளின் எண்ணிக்கை நான்காக அதிகரித்தது. சில மாடுகள் உயிருக்கு போராடி வருகின்றன. மாடுகள் பலியானதற்கு காரணம் என்ன என்பது தெரிய வில்லை. பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை