உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குளம் பாதுகாப்பு சங்கம் அடையாள உண்ணாவிரதம்

குளம் பாதுகாப்பு சங்கம் அடையாள உண்ணாவிரதம்

திருப்பூர்;நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ். பெரியபாளையம், ஊராட்சி அலுவலகம் முன், நஞ்சராயன்குளம் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது. ஊராட்சி உறுப்பினர் கோபால் தலைமை வகித்தார். சங்க தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் மோகன்குமார், துணைத்தலைவர்கள் நாகேந்திரன், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.குளத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு குறித்து ஊராட்சி மன்ற தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரேஷன் கடை இடமாற்றம் செய்ய வேண்டும். தாமரை கோவில் வரை நெடுஞ்சாலை ரோட்டில் மையத்தடுப்பு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை