உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 19ல் பிரதமர் திருப்பூர் வருகை

19ல் பிரதமர் திருப்பூர் வருகை

திருப்பூர்:சென்னையில், 19ம் தேதி நடைபெறும், 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை, பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். அன்று மாலை திருப்பூரில் நடக்கவுள்ள, பா.ஜ., நடத்தும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.கடந்த, 2ம் தேதி திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், இந்த மாதத்திலேயே அவர் மீண்டும் தமிழகம் வருவதும், திருப்பூரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதும், பா.ஜ.,வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி