உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாயமான மயானம் பொதுமக்கள் புகார்

 மாயமான மயானம் பொதுமக்கள் புகார்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தாலுகா, பெருந்தொழுவு கிராமம், காங்கயம்பாளையம் மக்கள், கலெக்டரிடம் அளித்த மனு: முதலிபாளையம் - பெருந்தொழுவு செல்லும் பாதையில், மணியம்பாளையம் பிரிவில் அமைந்துள்ள மயானத்தை, 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம். காங்கயம்பாளையம் ஊர் பொதுமக்கள், மயானத்தை பயன்படுத்தி வந்த நிலையில், திடீரென மயானம் மாயமாகிவிட்டது. அருகே உள்ள தனியார் நிலத்தை சுத்தம் செய்யும் போது, மயானத்தையும் சமன்செய்துவிட்டனர். மயானத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் தெற்கு தாசில்தார் சரவணனிடம் கேட்டபோது,''மயானம் இருந்த இடம், வருவாய்த்துறை பதிவேட்டில் வண்டிப்பாதை என்று உள்ளது; மயானம் என்று இல்லை. வண்டிப்பாதை இடத்தை அளவீடு செய்து மீட்டு, கம்பிவேலி அமைத்துள்ளோம். கலெக்டர் உத்தரவின் அடிப்படையில், பொதுமக்களுக்கு, மீண்டும் மயானம் ஒதுக்குவது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை