உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிப்போவுக்கு பஸ் செல்ல சுற்றுச்சுவர் அகற்றம் 

டிப்போவுக்கு பஸ் செல்ல சுற்றுச்சுவர் அகற்றம் 

திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோட்டில், அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல அலுவலகம், கிளை, 1 மற்றும் 2 செயல்படுகிறது. இரண்டு கிளைகளில் இருந்து, 169 பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பூர் - காங்கயம் ரோட்டை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக கிளை - 1 முன்புறம் மழைநீர் வடிகால் கட்டும் பணி துவங்கியுள்ளது.இதனால், பஸ்கள் சென்று வந்த முன் பகுதி வாயில் கேட் மூடப்பட்டுள்ளது. கட்டுமான பணி முடியும் வரை கேட் திறக்க வழியில்லை. பஸ்கள் தற்காலிகமாக கிளைக்கு சென்று வர, பெட்ரோல் நிரப்ப, நிறுத்த, டிப்போ இடதுபுறம் இருந்த சுவர் நேற்று இடித்து அகற்றப்பட்டது.தற்காலிக பாதை வழியாக பஸ்கள் சென்று திரும்புகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் வளைவான பகுதி என்பதால், பஸ்களை கவனமுடன் இயக்க டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !