உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை பணிகள் மிகவும் மந்தம்... நெட் ஒயர் மின் கம்பத்தில் தஞ்சம்!

சாலை பணிகள் மிகவும் மந்தம்... நெட் ஒயர் மின் கம்பத்தில் தஞ்சம்!

வீணாகும் தண்ணீர்பெருந்தொழுவு செல்லும் ரோட்டில், மாட்டுச்சந்தை மைதானம் அருகே, புதியதாக அமைக்கப்பட்ட குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- கோவிந்தராஜ், சத்யா காலனி. (படம் உண்டு)கண்காணிப்பது யார்?திருப்பூர், 40வது வார்டு, இடுவம்பாளையம், காமாட்சியம்மன் கோவில் வீதியில், மர்மநபர்களால் மரங்கள் அடிக்கடி வெட்டப்படுகிறது. வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் கண்காணிப்பதே இல்லை.- குமரேசன், இடுவம்பாளையம். (படம் உண்டு)கழிவுநீரால் அவதிதிருப்பூர், பலவஞ்சிபாளையம், திருக்குமரன் நகர், முதல் வீதியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. விரிவான கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.- சிவன்பாண்டி, திருக்குமரன் நகர். (படம் உண்டு)பணிகள் மிக மந்தம்அவிநாசி, தெக்கலுார், சென்னிமலைபாளையம் நஞ்சப்ப கவுண்டர் காடு பகுதியில் தார் ரோடு போட ஜல்லி, மண் கொட்டி பல மாதங்களாகிறது. ரோடு போடவில்லை. புழுதி பறந்து, வாகன ஓட்டிகள் கண்களில் நிறைகிறது.- கோபால், சென்னிமலைபாளையம். (படம் உண்டு)தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர், குருவாயூரப்பன் நகர் வடக்கு ஆரம்ப சுகாதார நிலையம்செல்லும் வழியில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- ஜெய்கணேஷ், குருவாயூரப்பன் நகர். (படம் உண்டு)மாநகராட்சி கவனத்துக்குதிருப்பூர், வடக்கு உழவர் சந்தை பின்புறமுள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவில் உபகரணங்கள் உடைந்துள்ளது. வந்து பார்க்கும் குழந்தைகள் ஏமாற்றம் அடைகின்றனர். மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு சரிசெய்ய முன்வர வேண்டும்.- உமாசங்கர், எஸ்.வி., காலனி. (படம் உண்டு)விழும் நிலையில் தொட்டிஅவிநாசி, நடுவச்சேரி ஊராட்சி, தளிஞ்சிபாளையத்தில் விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விரிசலுடன் காணப்படுகிறது. தாமதமின்றி சீரமைக்க வேண்டும்.- கிருஷ்ணசாமி, தளிஞ்சிபாளையம். (படம் உண்டு)தடுமாறும் வாகன ஓட்டிகள்திருமுருகன்பூண்டி - பெரியாயிபாளையம் சாலையில் பி.எஸ்.என்.எல்., இணையதள ஓயர்கள் சாலை வளைவில் கிடப்பதால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.- ஆறுமுகம், பெரியாயிபாளையம். (படம் உண்டு)குழாய் உடைப்புஅவிநாசி - மேட்டுப்பாளையம் ரோடு, செம்பியநல்லுார் ரைஸ் மில் எதிரில் குழாய் உடைந்து ஒரு மாதமாக தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- கணபதி, செம்பியநல்லுார். (படம் உண்டு)சாலை படுமோசம்திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் பிரிவு, கங்கா நகரில் சிக்னல் அருகே சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் இரவில் தடுமாறி விழுகின்றனர்.- விவேக், கங்கா நகர். (படம் உண்டு)மின்வாரியம் கவனத்துக்கு...திருப்பூர், 48வது வார்டு, ராக்கியாபாளையம், பட்டத்தரசியம்மன் கோவில் வீதியில் உயர்மின் அழுத்த கம்பியில் இன்டர்நெட் ஒயர் சுற்றப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.- ராஜேந்திரன், பத்மினிகார்டன். (படம் உண்டு)வீணாகும் மின்சாரம்திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில், ரயில்வே கேட் அருகே, காலை, 10:00 மணி வரை தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது.- சங்கரமோகன், கொங்கு மெயின் ரோடு. (படம் உண்டு)------ரியாக் ஷன்உடைப்பு சீரமைப்புதிருப்பூர், கல்லாங்காட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு விட்டது.- கார்த்திகேயன், கல்லாங்காடு. (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி