உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூத்தோர் தடகள போட்டிதிருப்பூர் வீரர்கள் அசத்தல்

மூத்தோர் தடகள போட்டிதிருப்பூர் வீரர்கள் அசத்தல்

திருப்பூர்;மூத்தோர் தடகள போட்டியில், திருப்பூரைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பிரிவு போட்டிகளில் பதக்கம் அள்ளினர்.மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி, அன்னுார் ஐ.சி.எஸ்., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இதில், வட்டெறிதல், சங்கிலி குண்டெறிதல், குண்டெறிதல் போட்டியில், திருப்பூர் மாவட்ட குடும்ப நலத்துறை, வட்டார சுகாதார புள்ளியாளர் சண்முகராஜன், இரண்டு தங்கம் வென்றார்.குண்டெறிதல் போட்டியில் அவர், வெள்ளிப்பதக்கம் பெற்றார். மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமதுபாஷா, சங்கிலி குண்டெறிதல் போட்டியில் வெள்ளி; குண்டெறிதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றார்.'வெட்ரன்ஸ்' சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சுமதி, சங்கிலி குண்டெறிதல், வட்டெறிதல், குண்டெறிதல், ஈட்டி எறிதல் விளையாட்டில், 4 தங்கம் வென்றார். துணை செயலாளர் அகிலாண்டேஸ்வரி, 4 வெண்கலம்; ஞான எப்சிபா, 4 தங்கம் வென்று அசத்தினர்.இவர்களை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு, மாவட்ட பயிற்சி கலெக்டர் ஹிருதயா விஜயன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்