உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தாலுகா அலுவலகம் முற்றுகை

 தாலுகா அலுவலகம் முற்றுகை

திருப்பூர்: தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியில், 60 குடும்பத்தினர் அங்குள்ள இடத்தில் வீடு கட்டி வசிக்கின்றனர். இவர்கள், 3 ஆண்டாக தங்கள் இடத்துக்கு பட்டா கேட்டு வருவாய் துறையை அணுகி வருகின்றனர். பல போராட்டம் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், ஆவேசமடைந்த அப்பகுதியினர் நேற்று காலை தாராபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, தாசில்தார் வாகனத்தை சிறைப்பிடித்து அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம், தாசில்தார் ராமலிங்கம் பேச்சு நடத்தினார். அதில், 'சமீபத்தில் தான் பதவியேற்றுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும்,' தெரிவித்தார். இதனால், பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டைகளை ஆகியவற்றை, தங்களது மனுவுடன் இணைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை