உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிறவும் தமபோல் செயின்!உழவர் சந்தைகளுக்கு 7 டன் காய்கறி வரத்து 

பிறவும் தமபோல் செயின்!உழவர் சந்தைகளுக்கு 7 டன் காய்கறி வரத்து 

அரசாணி, கரும்பு, மஞ்சள் அதிகளவில் சந்தைக்கு வந்ததால், பொங்கல் நாளில் மொத்த காய்கறி வரத்து ஏழு டன் அதிகமாகியது.திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின் உள்ள, வடக்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக, 22 முதல், 25 டன் காய்கறி விற்பனைக்கு வரும். தக்காளி, ஐந்து முதல் ஏழு டன் வரும். நேற்று, 28 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது.திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் உள்ள தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக, 80 முதல், 85 டன் காய்கறி வரும், நேற்று,89 டன் காய்கறி விற்பனைக்கு வந்தது. இரண்டு சந்தைக்கு சேர்த்து, ஆறு டன் அளவு காய்கறி வரத்து அதிகமாகியது.உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'நாளை (இன்று) மாட்டுப்பொங்கல், கால்நடைகளுக்கு ஓய்வளித்து, அவற்றை குளிப்பாட்டி, பொங்கல் படைத்து வழிபடுவர். குறைவான விவசாயிகளே சந்தைக்கு வருவர் என்பதால், இன்றே (நேற்று) காய்கறிகளை அதிகமாக கொண்டு வந்து விட்டனர்.இவற்றுடன் கரும்பு, மஞ்சள், அரசாணி உள்ளிட்டவையும் விற்பனைக்கு வந்ததால், மொத்த சந்தை வரத்து அதிகமாகியது.வழக்கமாக, 8:00 மணிக்கு முடிந்து விடும் சந்தை வரத்து, விடுமுறை நாள் என்பதால், காலை, 10:00 மணி வரை நடந்தது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி