உள்ளூர் செய்திகள்

தமிழ் கூடல் விழா

உடுமலை:உடுமலை சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த, தமிழ்கூடல் விழாவுக்கு உதவி தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார். தமிழாசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார்.வரலாற்று ஆசிரியர் லட்சுமி, கணித ஆசிரியர் ராமசாமி முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் விருதுபெற்ற விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் நர்மதா 'தமிழ்மொழியின் சிறப்பு' தலைப்பில் பேசினார்.விழாவையொட்டி நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் சித்ரா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி