உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தைப்பூச தேர்த்திருவிழா; கோவில்களில் கோலாகலம்

தைப்பூச தேர்த்திருவிழா; கோவில்களில் கோலாகலம்

பொங்கலுார்:அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.சுவாமி திருவீதி உலா, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று பிற்பகல்,1:00 மணிக்கு தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது. வள்ளி தெய்வானை சமேதகராக விநாயகர் தேர் முன்னால் செல்ல, பின் அம்மன் தேரும், பாலதண்டாயுதபாணி தேரும், அலகுமலை ரத வீதியில் வலம் வந்தது.முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்துஇழுத்தனர். மாலை,6:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்ட ஏற்பாடுகளை முன்னாள் திருப்பணி குழு தலைவர் சின்னு, தேர்த்திருவிழா குழு உறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு விழாக்குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.

கொங்கணகிரி

திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரியில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கந்தப்பெருமான் கோவில் உள்ளது.இக்கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.விழாவையொட்டி, மாலை 3:30 மணிக்கு கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம் 4:15 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, 'கந்தனுக்கு அரோகரா' கோஷம் முழங்க தேர்வடம் பிடித்து இழுத்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ