உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

திருப்பூர்:திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, சர்க்கார் பெரியபாளையம், ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவிலில், ஆடிவெள்ளியை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.காலையில், கணபதி வழிபாட்டை தொடர்ந்து, சிவசக்தி கலசஸ்தாபனம், ருத்ரஜெப ஹோமம் நடந்தது. மதியம் பால், பன்னீர், மஞ்சள், இளநீர், தயிர் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் சுக்ரீஸ்வருக்கு மகா அபிேஷகம் செய்யப்பட்டது.மதியம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஆவுடைய நாயகி அம்மன் மண்டபம் முன், 300 க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. அம்பாளுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம் படைத்து, திருவிளக்குகளை ஏற்றி வைத்து, பெண்கள் மனமுருகி வழிபட்டனர். முன்னதாக, நேற்று பிரதோஷ வழிபாடு மாலையில் நடந்தது. காலை முதல் மாலை வரை நடந்த சிறப்பு பூஜை, அன்னதானத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.---திருப்பூர், பெரியபாளையம், சுக்ரீஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நடந்த திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை