உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மை பணியாளர் பதிவு நாளை கடைசி நாள்

துாய்மை பணியாளர் பதிவு நாளை கடைசி நாள்

திருப்பூர்:அரசு மற்றும் தனியார் துறைகளில் துாய்மைப்பணியில் ஈடுபடுவோர் தங்கள் விவரங்களை நாளைக்குள் (17ம் தேதிக்குள்) சமர்ப்பிக்க உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.மாநில அரசு துாய்மைப்பணியாளர் மேம்பாடு திட்டத்தை உள்ளாட்சிகளில் செயல்படுத்தவுள்ளது. துாய்மைப்பணியாளருக்கு திறன் பயிற்சி குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி மாற்றுத் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி பென்ஷன் காப்பீடு போன்ற அரசு திட்டங்களை இணைப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் வடிகால் பணி செய்வோர் கழிவுநீர் சேகரிப்பு வாகனம் வாயிலாக வீடுகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வோர் மழைநீர் வடிகால் சுத்தம் செய்வோர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்புப்பணி செய்வோர் பொது மற்றும் சமூக கழிப்பறைகளை பராமரிப்பவர்கள் உள்ளிட்டோர் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தன.உள்ளாட்சி நிர்வாகங்களில் பணிபுரியும் நிரந்தர தற்காலிக பணியாளர்கள் தவிர பெட்ரோல் பங்க் மண்டபங்கள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் பெரிய பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் முறை சாரா தொழிலாளர்கள் உள்பட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களும் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை