உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாத்துக்குடி கன்டெய்னர் லாரிகள் விதிமுறை மீறல்! உள்ளூர் தொழில் பாதிப்பதாக புகார்

துாத்துக்குடி கன்டெய்னர் லாரிகள் விதிமுறை மீறல்! உள்ளூர் தொழில் பாதிப்பதாக புகார்

திருப்பூர்:திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட கன்டெய்னர் லாரிகள் இயக்குவோர் மூலமாக, ஏற்றுமதிக்கான ஆடைகளை அனுப்பி வைக்கின்றனர். கன்டெய்னர் லாரிகளில், சரக்குகள் ஏற்றி, துாத்துக்குடி துறைமுகத்துக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.துறைமுகத்தில் உள்ள, சரக்கு முனையத்தில் இருப்பு வைத்து, அந்தந்த கப்பல்கள் வாயிலாக, கன்டெய்னர் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதேபோல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சரக்குகளும், துறைமுகங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட லாரிகள் மூலமாக, அந்தந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இழப்பு அதிகம்

வங்கதேசத்தில் இருந்து ஆடைகள் இறக்குமதி அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த திருப்பூர் பனியன் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இறக்குமதியாகும் 'பேப்ரிக்' துணிகளை திருப்பூர் எடுத்துவரும் லாரிகள், மறைமுகமாக உள்ளூர் கன்டெய்னர் லாரிகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.இறக்குமதி சட்ட விதிகளின்படி, துறைமுகத்தில் இருந்து சரக்கை எடுத்துவரும் லாரிகள், திருப்பூரில் சரக்கு இறக்கிய பின், காலியாக துறைமுகம் செல்ல வேண்டும். வந்து செல்ல கணக்கிட்டுத்தான், கட்டணம் வசூலிக்கின்றனர். இருப்பினும், சட்டவிதிகளை மீறி, திருப்பூரில் இருந்தும் சரக்குகளை துறைமுகம் வரை ஏற்றிச்செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொச்சி, சென்னை, மும்பை துறைமுகங்களில், இதுபோன்ற முறைகேடான சரக்கு ஏற்றிச்செல்லும் நடைமுறை, முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. துாத்துக்குடி துறைமுகத்தில் மட்டும், இன்னும் கட்டுப்படுத்தப்படாமல் நீடிக்கிறது. துறைமுகத்தில் இருந்து, இறக்குமதி சரக்குகளை கொண்டு செல்லும் துாத்துக்குடி கன்டெய்னர் லாரிகள், சரக்கை இறக்கிவிட்டு மீண்டும், துறைமுகத்துக்கு ஏற்றுமதி சரக்குகளை கையாள்வது நீடிக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும்.திருப்பூர் எக்ஸ்போர்ட் கார்கோ டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் துணை தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:இறக்குமதி சரக்குகளை திருப்பூர் எடுத்து வரும் லாரிகள், முறைகேடாக இயங்கிருந்து சரக்கை ஏற்றிச்செல்வதால், உள்ளூர் கன்டெய்னர் லாரி தொழில் பாதிக்கிறது. சட்டவிதிமுறையை மீறி, இறக்குமதி லாரிகளில், ஏற்றுமதி சரக்குகள் கையாளப்படுகின்றன. இதுதொடர்பாக, ஏற்றுமதியாளர்கள் சங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கருணாகரன்
மே 07, 2024 08:03

உள்ளூர்னா கட்டபஞ்சாயத்து, கந்துவட்டி போன்ற தொல்லைகள் தான் அதிகம். உள்ளூர்காரங்க தொழில்.போட்டியில் லாரியோட சரக்கையும்.கடத்திருவாங்க. எரிச்சுருவாங்க. அதனால்தான் உள்ளூர் ஆளுங்க சங்காத்தமே வாணாங்கறாங்க போலிருக்கு.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ