உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வி.ஏ.ஓ. அலுவலகத்துக்கு பல ஆண்டுகளாக பூட்டு 

 வி.ஏ.ஓ. அலுவலகத்துக்கு பல ஆண்டுகளாக பூட்டு 

திருப்பூர்: திருப்பூர் அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பெத்தாம்பாளையம். இங்கு வி.ஏ.ஓ.,வுக்கு கடந்த 2003-04ம் நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் அலுவலகம் கட்டி திறக்கப்பட்டது. இதன் கீழ் வலசுப் பாளையம், பெத்தாம்பாளையம், நல்லுார்பாளையம், சிங்கனுார் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது முதல் பயன் படுத்தாமல் பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. இங்கு பணியாற்ற வேண்டிய வி.ஏ.ஓ., கணபதிபாளையம் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இந்த அலுவலகத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பணிக்காக கணபதிபாளையம் அலுவலகம் செல்லும் நிலை உள்ளது. இங்கு நியமிக்கப்படும் வி.ஏ.ஓ.க்கள் குரூப் வில்லேஜ் என கணபதிபாளையம் அலுவலகத்திலேயே பணியாற்றுகின்றனர். அலுவலகம் கட்டியும் பயனில்லாமல் வீணாகிறது. மக்கள் அவதியும் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை