உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வாசன் பிறந்த நாள் பல்லடத்தில் விழா

 வாசன் பிறந்த நாள் பல்லடத்தில் விழா

பல்லடம்: பல்லடத்தில், த.மா.கா. தலைவர் வாசன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நகர தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சுப்பிரமணியம், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ராமசாமி, மாவட்டத் தலைவர் சண்முகம், மாவட்ட பொதுச் செயலாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொங்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. 300க்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ