| ADDED : ஜன 19, 2024 04:33 AM
திருப்பூர் : தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வரும், 21ம் தேதி, 'இந்தியாவில் தேர்தல்கள்' எனும் தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது.இப்போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், http://www.erolls.tn.gov.in/quiz2024 என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர், மொபைல் எண், இ-மெயில் மற்றும் விபரங்களை பதிவு செய்யலாம். பதிவுக்கு இன்று (19 ம் தேதி) கடைசி நாள். மேலும் தகவல்களுக்கு 1800 4252 1950 அல்லது உதவி மையத்தை, 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தலில் வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்த இப்போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மட்டுமின்றி, ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். தங்களது விபரங்களை பதிவு செய்தவுடன், பிற விபரங்கள் மொபைல் எண், இ மெயிலுக்கு பகிரப்படும். வரும், 21ம் தேதி காலை, 11:00 முதல், 11:15 மணி வரை வினாடி - வினா போட்டி ஆன்லைன் வாயிலாகவே நடக்கும்,' என்றார்.