உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாணவர் விடுதி பாலியல் விவகாரம்: வார்டன், சமையல்காரர் சஸ்பெண்ட்

 மாணவர் விடுதி பாலியல் விவகாரம்: வார்டன், சமையல்காரர் சஸ்பெண்ட்

திருப்பூர்: காங்கயத்தில் அரசு விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், விடுதி வார்டன், சமையல்காரர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம், தாராபுரம் ரோட்டில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. பள் ளி பின்புறம், பாரதியார் நகரில், சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 50 மாணவர்கள் விடுதியில் தங்கி, பள்ளியில் படித்து வருகின்றனர். விடுதி வார்டனாக மாரிமுத்து, 45 என்பவர் பணியாற்றி வந்தார். தற்காலிக வார்டனாக காங்கயத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த், 22 என்பவரை, கடந்த, இரு ஆண்டுகளாக விடுதியில் தங்க வைத்து, மாரிமுத்து மாத சம்பளம் கொடுத்து வந்தார். அ ரவிந்த் எட்டு மாணவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது, சமீபத்தில், குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினர் மற்றும் சைல்டுலைன் அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. அரவிந்த்தை, 'போக்சோ' வழக்கில் காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, விடுதி வார்டன் மாரிமுத்து, சமையல்காரர் தங்கராசு ஆகியோரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கல்பனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ