உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடுக்கு மாடி குடியிருப்புக்கு விரைவில் குடிநீர் இணைப்பு

அடுக்கு மாடி குடியிருப்புக்கு விரைவில் குடிநீர் இணைப்பு

திருப்பூர் : செல்லாண்டியம்மன் துறை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விரைவில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும், என அதிகாரிகள் தரப்பு உறுதியளித்ததாக எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் அறிக்கை: திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை அடுக்குமாடிக் குடியிருப்பில் 3 தளங்களில் 240 வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியினருக்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரி துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவரது அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி நிர்வாகம் அதற்கான முயற்சி மேற்கொண்டுள்ளது.இப்பகுதிக்கு தேவையான கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைத்து, குழாய்கள் பதிப்பு பணிகளையும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஏற்படுத்த வேண்டும். அதன் பின் வீட்டு உரிமையாளர்கள் உரிய சொத்து வரியினங்கள் மற்றும் குழாய் இணைப்புக்கான தொகையினையும் செலுத்தி விண்ணப்பிக்கும் நிலையில் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி