உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை /  திருவண்ணாமலைக்கு 200 சொகுசு பஸ்கள்

 திருவண்ணாமலைக்கு 200 சொகுசு பஸ்கள்

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நாகர்கோவில், கோவை, துாத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு, 200 சொகுசு விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு, 160 சொகுசு, 'ஏசி' பஸ்கள், டிச.3, 4ம் தேதிகளில் இயக்கப்படும். இதேபோல, நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவையில் இருந்தும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சொகுசு மற்றும் படுக்கை வசதி உள்ள, 'ஏசி' சொகுசு பஸ்கள், டிச., 2, 3ம் தேதிகளில் இயக்கப்பட உள்ளன. மொத்தம், 200க்கும் மேற்பட்ட விரைவு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை