உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உலாவும் முதலைகளால் பீதி

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உலாவும் முதலைகளால் பீதி

திருச்சி,:திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரத்தில் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் கரையோரத்தில் சலவைத் தொழிலாளர்களும், கூலித்தொழிலாளர்களும் வசிக்கின்றனர். தற்போது மேட்டூர் அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை, அழகிரிபுரம் கொள்ளிடம் பாலம் கீழே, ஆற்றில் முதலை நடமாட்டம் தென்பட்டது. இதை பாலத்தின் மேல் இருந்து வேடிக்கை பார்த்தவர்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். கொள்ளிடம் ஆற்றில் முதலை உள்ளதால், கரையோர மக்கள் பீதி அடைந்துள்ளனர். முதலைகளை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என, தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், ஒரு மாதத்துக்கு முன், திருச்சி, சிந்தாமணி காவிரி ஆற்றுப்பகுதியில் முதலைக்குட்டிகள், முதலை நடமாட்டம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை