மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
மெக்கானிக் உடல் அழுகிய நிலையில் வீட்டில் மீட்பு
01-Oct-2025
வேலுார்:வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கீழ்சென்றத்துார் கிராமத்தில், 15க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டதில் பலராமன், 80, என்ற முதியவர் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களை, மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, அவர்களிடம், குடிநீருடன் கழிவுநீர் கலந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என, கேட்டறிந்தார். அக்கிராம மக்களை, சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்பகுதியிலுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
02-Oct-2025
02-Oct-2025
01-Oct-2025