உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / பேய் ஓட்டுவதாக மகனை கொன்ற தாய் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்

பேய் ஓட்டுவதாக மகனை கொன்ற தாய் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்

ஆரணி:வேலுார் மாவட்டம், சின்னபாலம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி திலகவதி, 30. இவர்களது மகன் சபரி, 7. கணவர் இறந்ததால், மகன் சபரியுடன் கே.வி.குப்பத்தில் உள்ள தன் தாய் வீட்டில் திலகவதி வசித்தார். சபரிக்கு அடிக்கடி உடல்நிலை பாதித்தது. இதனால், அவருக்கு பேய் பிடித்துள்ளதாக கருதி, அதை விரட்ட கடந்த, 2021 ஜூன், 21ல் திலகவதி, தன் தங்கைகளான பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோருடன், சபரியை அழைத்து கொண்டு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு ஆட்டோவில் சென்றனர். வழியில், கண்ணமங்கலத்தில், சபரிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.அப்போது, அவர்கள் சபரிக்கு பேய் பிடித்துள்ளது எனக்கூறி, அவரை கீழே தள்ளி, கழுத்து மீது அமர்ந்து, நாக்கை இழுத்து பிடித்ததில், சிறுவன் சபரி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தான். கண்ணமங்கலம் போலீசார், சபரியின் தாய் திலகவதி, அவரது தங்கைகள், பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோரை கைது செய்தனர்.இந்த வழக்கு, ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, குற்றம்சட்டப்பட்ட திலகவதி, பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை