மேலும் செய்திகள்
மாணவிக்கு தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு
6 hour(s) ago
கார் வாங்கி தராத தந்தையை கொன்ற மகனுக்கு காப்பு
19-Dec-2025
தீயில் எரிந்து ஏ.டி.எம்., இயந்திரம் நாசம்
16-Dec-2025
வேலுார் : வேலுார் மாவட்டம், திருவலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு, 49, பாலகுப்பம் கிராம பஞ்., செயலர். அவர், காட்பாடி யூனியனுக்கு உட்பட்ட பல கிராமங்களில் பஞ்., செயலராக பணியாற்றி உள்ளார். இதில், 2011 - 17ல், முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்துக்களை வாங்கி உள்ளதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன.வேலுார் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் கடந்த, 25ல் பிரபு வீட்டில் சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஆவணங்களை ஆய்வு செய்ததில், பஞ்., செயலர் மற்றும் அவரது மனைவி பெயரில் வருமானத்திற்கு அதிகமாக, 20.43 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்தது தெரிந்தது.இதையடுத்து, கிராம பஞ்., செயலர் பிரபு மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
6 hour(s) ago
19-Dec-2025
16-Dec-2025