மேலும் செய்திகள்
பென்லேண்ட் மருத்துவமனையில் மருந்து வழங்க ஊழியரின்றி அவதி
16 hour(s) ago
பெண் பயணியை காப்பாற்றி காயமடைந்த காவலர்
03-Oct-2025
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
ஒடுகத்துார் : ஒடுகத்துார் அருகே மண் கடத்திய, தி.மு.க., கவுன்சிலரின் லாரியை, கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டாவில், முரம்பு மண் கடத்துவதாக வந்த புகார் படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ராமஜெயம் தலைமையிலான அதிகாரிகள், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலையில், நேற்று வாகனச்சோதனை நடத்தினர். அப்போது, முரம்பு மண் கடத்திச் சென்ற லாரியை மடக்கி பிடித்து, பள்ளிகொண்டா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட லாரி அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லுார் பஞ்சாயத்தை சேர்ந்த, தி.மு.க., கவுன்சிலர் மகாலிங்கத்திற்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிக்கொண்டா போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான, தி.மு.க., கவுன்சிலர் மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.
16 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025