மேலும் செய்திகள்
பரிசு அனுப்புவதாக கூறி மாணவனிடம் பணம் பறிப்பு
13-Nov-2025
பெண் டாக்டரை மிரட்டி ரூ.83 லட்சம் அபேஸ்
13-Nov-2025
வேலுார்: பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட வேலுார் தி.மு.க., - எம்.பி., கதிர்ஆனந்த் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன், நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். வேலுார் தொகுதியில், 2019 லோக்சபா தேர்தலின்போது, பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை, வேலுார் நீதித்துறை நடுவர் முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நவ., 13ம் தேதி வழக்கு விசாரணையின் போது, கதிர்ஆன்ந்த், வழக்கில் சம்பந்தப்பட்ட அவரது ஆதரவாளர் தாமோதரன் ஆகியோர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இன்னொரு ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் ஆஜராகாததால், அதிருப்தியடைந்த நீதிபதி, அவரை கைது செய்ய, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. பூஞ்சோலை சீனிவாசன், நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். தாமோதரனும் ஆஜரான நிலையில், கதிர்ஆனந்த் எம்.பி., ஆஜராகவில்லை. நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார். இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்தில் இருந்து இதுவரை, மூவரும் கூட்டாக விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
13-Nov-2025
13-Nov-2025