உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 11 வயது தங்கை கர்ப்பம் 16 வயது அண்ணன் கைது

11 வயது தங்கை கர்ப்பம் 16 வயது அண்ணன் கைது

செஞ்சி : செஞ்சி அருகே 11 வயது தங்கையை கர்ப்பமாக்கிய 16 வயது அண்ணனை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 11 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 16 வயது அண்ணன் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளார்.இவர்களின் பெற்றோர் இரவில் மொட்டை மாடியிலும், சிறுவனும், சிறுமியும் கீழே ஹாலில் துாங்கி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் சிறுமியை, அவரது அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெற்றோர் சிறுமியை அனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பரிசோதனையில், சிறுமி நான்கு வாரம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியை சிகிச்சைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை