உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

வானுார் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது.கல்லுாரி முதல்வர் வில்லியம் செய்திக்குறிப்பு:இக்கல்லுாரியில் இந்தாண்டுக்கான இளங்கலை படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு, கடந்த 12ம் தேதி நடந்தது. நாளை 26ம் தேதி ஆங்கிலம், வணிகவியல், கம்யூட்டர் அறிவியல் ஆகியப் பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.27ம் தேதி தமிழ் மற்றும் கணிதம் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. தகுதியுடைய மாணவர்களுக்கு சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்த துறைகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் சேர்க்கைத் தொடர்பான சந்தேகங்களுக்கு கல்லுாரி முதல்வரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி