உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

மயிலம் : மயிலம் அடுத்த முப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. முப்புளி அரசு மருத்துவமனையில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழா விழாவிற்கு மயிலம் வட்டார தலைமை மருத்துவர் அலுவலர் தேன்மொழி தலைமை தாங்கினார். பாரதிதாசன், ஆனந்தலட்சுமி,முன்னிலை வகித்தார். மோகன கிருஷ்ணன் வரவேற்றார்விழாவில் டாக்டர் தேன்மொழி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மயிலம் பகுதி மருத்துவ அலுவலர்கள் மயிலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சமுதாய நல செவிலியரகள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை